/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் வரி செலுத்த கோரி வீதி வீதியாக பிரசாரம்
/
தொழில் வரி செலுத்த கோரி வீதி வீதியாக பிரசாரம்
ADDED : பிப் 18, 2025 10:18 PM
அன்னுார்; அன்னுார் பேரூராட்சியில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 9,200 சொத்துவரி செலுத்துவோரும், 5,600 குடிநீர் இணைப்பு தாரர்களும் உள்ளனர். இத்துடன் தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம் என ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் ஆக வேண்டி உள்ளது. கடந்த 15 நாட்களாக தீவிர வரி வசூல் இயக்கம் நடைபெற்று வருகிறது.
தினமும் மூன்று வார்டுகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் சென்று ஆட்டோவில், 'வரி செலுத்தி வளர்ச்சி பணி செய்ய உதவ வேண்டும். வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நிலை ஏற்படும்,' என தெரிவித்து வருகின்றனர்.
இத்துடன் பேக்கரி, ஓட்டல், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தொழில் வரி மற்றும் உரிமக் கட்டணம் செலுத்த கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

