/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்
/
காங்., கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்
ADDED : ஜூலை 07, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், 'அரசியல் அமைப்பை பாதுகாப்போம்' என்பதை வலியுறுத்தி காங்., கட்சி சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தலைமை வகித்தார். நகரத்தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் தமிழ்செல்வன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 'அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் பா.ஜ., பலவீனப்படுத்துகிறது. அரசியல் அமைப்பை பாதுகாக்கவும், இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் காங்கிரஸ் போராடுகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்., கமிட்டி துணைத்தலைவர் ஜெயபாலன், டி.சி.டி.யு., மாநில தலைவர் புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.