/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலுதுாக்குதல் போட்டி பி.எஸ்.ஜி., 'ஸ்ட்ராங்'
/
வலுதுாக்குதல் போட்டி பி.எஸ்.ஜி., 'ஸ்ட்ராங்'
ADDED : ஜன 15, 2024 12:19 AM
கோவை;பல்கலை அளவில் மாணவியருக்கான வலுதுாக்குதல் போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரி மாணவியருக்கான வலுதுாக்குதல் போட்டி, ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்தது. போட்டியை, கல்லுாரி செயலாளர் சாராம்மா, முதல்வர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று தங்களின் பலத்தை காட்டினர்.
பல்வேறு எடைப் பிரிவுகளில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி 57 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 53 புள்ளிகளுடன் ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி அணி இரண்டாமிடத்தையும், 45 புள்ளிகளுடன் நிர்மலா கல்லுாரி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
பாரதியார் பல்கலையின் ஸ்ட்ராங் உமன் பட்டத்தை, பி.எஸ்.ஜி., மாணவி மோகனபிரியா தட்டிச்சென்றார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, ஆர்.வி.எஸ்., கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் சத்யா மற்றும் கார்வேந்தன் செய்திருந்தனர்.