ADDED : அக் 29, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: இன்றைய இயந்திரமயமான உலகில், மக்கள் தங்கள் உடலைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. மக்களுடைய மனங்களில் ஒரு வித விரக்தி, இறுக்கமான நிலை, உள்ளச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் உடல் சோர்ந்து விடுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.டி.சி., கல்லுாரி இணைந்து, நியூபிரிட்ஜ் மையத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ச்சி பயிலரங்கு நடத்தப்பட்டது.
தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகள், மனஅழுத்த குறைப்பு குறித்து, மனநல நிபுணர்கள், கலைகள் வாயிலாக நிவர்த்தி செய்ய முடியும் என்பதை செயல்முறையுடன் விளக்கினர்.

