/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன அழுத்தம் மாயமாகும்... வீட்டுக்குள் சுத்தமான காற்று வீசும்!
/
மன அழுத்தம் மாயமாகும்... வீட்டுக்குள் சுத்தமான காற்று வீசும்!
மன அழுத்தம் மாயமாகும்... வீட்டுக்குள் சுத்தமான காற்று வீசும்!
மன அழுத்தம் மாயமாகும்... வீட்டுக்குள் சுத்தமான காற்று வீசும்!
ADDED : ஜன 06, 2024 09:19 PM
தனி வீடு இல்லாதவர்களின் நிறைவேறாத ஆசைகளில், தோட்டம் அமைப்பதும் ஒன்று. 'அதெல்லாம் அந்தக்காலம். இப்போது வீட்டுக்குள்ளேயே தோட்டம் உருவாக்கி, அத்தனை ஆசைகளையும் சாத்தியமாக்கலாம்' என்கிறார், தோட்ட செடிகள் விற்பனையாளர் ஆனந்தகுமார்.
சுத்தமான காற்றுக்கு...
வீட்டிற்குள் வரும் காற்றை சுத்தமாக்கி, ஆக்ஸிஜனை அதிகம் வழங்கும், 'ஸ்னேக் பிளான்ட்', 'சாமியா' ரக செடிகள், குறைந்த நீர், வெளிச்சத்தில் வளரும். பாம்பை போலவே, இதன் இலைகள் வளைந்து நெளிந்திருக்கும்.
குட்டி குட்டியாய்!
ஆபீஸ் டேபிள், வரவேற்பு அறை, ஜன்னல் திண்டுகளில், குட்டி செடிகள் வைத்து அலங்கரிக்கலாம். கேக்டஸ் அண்டு செக்யூலஸ் வகை செடிகளின்(கள்ளிச்செடி) மினியேச்சர், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் காட்சிக்கு அழகாக இருக்கிறது. இச்செடிகளுக்கு வாரத்திற்கு இருநாட்கள், குறைந்தளவு தண்ணீர் ஊற்றினாலே போதுமாம். கிப்ட் கொடுக்க, இந்த ரக செடிகள் ஏற்றவை.
படரும் பச்சை
சுவர்கள், பால்கனி ஓரங்களில், படர்ந்து வளரும் செடிகளை ரசிக்காமல் நகர முடியுமா? குட்டி தொட்டியில் கொக்கி இணைத்து, தொங்கவிடும் செடிகள் நிறைய உள்ளன. கிரீப்பர் ரக செடிகளை, அடுக்குமாடிகளில் குடியிருப்போர் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
அதிக வெளிச்சம்...
ஜன்னல், பால்கனி போன்ற அதிக வெளிச்சம் உள்ளே வரும் இடங்களில், ஆந்துாரியன் செடிகள் வளர்க்கலாம். இதற்கும், குறைந்தளவு நீர் போதுமானது.
பூச்செடிகள்
வழக்கமான பூச்செடிகளை காட்டிலும், வித்தியாசமான நிறங்களில், அழகுக்காக பூச்செடி வளர்க்க நினைப்போர், கலோன்சி, போகன்பில்லா, பீஸ் லில்லி, டேபிள் ரோஸ் செடிகள் வாங்கி வளர்க்கலாம். பாய்ன்ட் சென்டியா ரக செடிகள், சிவப்பும், பச்சையும் கலந்துள்ளது. இதேபோல், மூலிகை செடிகளையும் வீட்டிற்குள் வளர்க்கலாம்.
வீட்டிற்குள் வளரும் செடிகளால், பசுமையான சூழல் கிடைப்பதோடு, மனதிற்கு அமைதியும், நல்ல காற்றும் கிடைக்கிறது. மன அழுத்தம் ஓடியே போகும். நேர்மறை எண்ணங்களையும் துாண்டிவிடும் என்கிறார் ஆனந்தகுமார்.