/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறிய தவறு நடந்தாலும் கடும் நடவடிக்கை! 'ஸ்கேன் சென்டர்' பொறுப்புடன் நடக்க அறிவுரை

ADDED : ஜூன் 06, 2025 06:13 AM

கோவை; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 'பிறப்பிற்கு முன் பாலினம் கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் சட்டம் செயல் திட்ட மேம்பாடு' என்ற தலைப்பில் , கோவையில் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது.
கலெக்டர் பவன் குமார் தலைமை வகித்து, சட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி கூறியதாவது:
கடந்த, 1994ல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டும், தற்போது வரை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய சூழல் உள்ளது. சிறிய தவறுகள் நடந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களும் பொறுப்புடன் விதிமுறைகளை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். ஸ்கேன் சென்டர் சார்ந்த அனைத்து விபரங்கள், செயல்பாடுகளுக்கும் பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும். முன்பு அனைத்தும், தாள்களில் சமர்ப்பிக்கவேண்டும். தற்போது, புதிய வெப் போர்டல் துவக்கப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை எளிதாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை பணியாளர்கள், அரசு, தனியார் ஸ்கேன் சென்டர் உரிமையாளர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பாலுசாமி, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் நிர்மலா, உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.