/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் பக்கவாதம் விழிப்புணர்வு
/
ஸ்ரீ ராமகிருஷ்ணாவில் பக்கவாதம் விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2025 12:21 AM

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம், பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது.
மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர் அசோகன் பேசுகையில், ''பக்கவாத ஆரம்ப அறிகுறிகளை உடனடியாகக் கவனிப்பதும், தகுந்த மருத்துவ உதவியைத் தேடுவதும், சரியான சிகிச்சை மற்றும் புனரமைப்பு வழங்குவதும் நோயாளி மீண்டு வர உதவுகிறது,'' என்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பியல் துறையைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்கள் டாக்டர் அசோகன், டாக்டர்கள் அருணாதேவி, வேதநாயகம், விக்ரம், திவ்யா, முத்துராஜன் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஆரம்ப நிலையிலே அறிகுறிகளை கண்டறிவது, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது மற்றும் பக்கவாதத்துக்கு பிறகு வழங்கப்படும் பராமரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேஷ் குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

