ADDED : மார் 11, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி: கணியூர் ஊராட்சி செல்லப்பம் பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் -- கனகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு, 19 வயதில் மாற்றுத்திறனுள்ள பெண் உள்ளார். இத்தம்பதி, வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சூலூரில் நடந்த நிகழ்ச்சியில், 594 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இத்தம்பதிக்கு கிடைக்கவில்லை. உறவினர்களுடன் கணியூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று மதியம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

