/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் கேட்டு போராட்டம்
/
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் கேட்டு போராட்டம்
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் கேட்டு போராட்டம்
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் கேட்டு போராட்டம்
ADDED : செப் 20, 2024 10:27 PM

கோவை : பணப்பலன்கள் வழங்காததை கண்டித்து, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு, கடந்த ஓராண்டாக பணப்பலன்களை வழங்காததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று மதுக்கரை வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் வட்டார செயலாளர் மலர்வேந்தன் கூறுகையில்,''பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக, கடந்த, 17ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
''இதையடுத்தே காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளோம். எழுத்துபூர்வமாக உறுதிமொழியை வழங்க வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தனலட்சுமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் தங்கபாசு, மாவட்ட செயலாளர் வீராசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.