/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய ஓய்வூதியம் வழங்க மறுத்தால் போராட்டம்; ஓய்வூதியர் சங்கம் உறுதி
/
பழைய ஓய்வூதியம் வழங்க மறுத்தால் போராட்டம்; ஓய்வூதியர் சங்கம் உறுதி
பழைய ஓய்வூதியம் வழங்க மறுத்தால் போராட்டம்; ஓய்வூதியர் சங்கம் உறுதி
பழைய ஓய்வூதியம் வழங்க மறுத்தால் போராட்டம்; ஓய்வூதியர் சங்கம் உறுதி
ADDED : பிப் 15, 2025 07:19 AM

கோவை; கோவையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், -------26வது ஆண்டு விழா, வடவள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் பலராமன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் உதயகுமார் விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழக அரசு ஓய்வூதியம் சம்பந்தமாக, நியமிக்கப்பட்ட குழுவினை ரத்து செய்து, காலம் தாழ்த்தாமல் உடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003க்கு பின் பணிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
மறுத்தால், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும்,'' என்றார். சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ''நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தலைமை செயலகத்தில் இயங்கும், நிதி ஆலோசனைக்குழு பரிந்துரையின் அடிப்படையில்தான், முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார். எனவே, அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்,'' என்றார்.
செயலாளர் சிங்காரவேலு, பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.