தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


ADDED : பிப் 19, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; நாடு முழுவதும், அஞ்சல் துறையில், தற்போது, 19,500 பட்டுவாடா அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனை மாற்றும் விதமாக, 'சுதந்திரமான டெலிவரி மையம்' மற்றும் 'மெஷினைஸ்டு பீட் டெலிவரி' என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத புதிய திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது.

மேலும், பாரம்பரிய தபால் துறையினை, தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி, தபால் துறை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல், தபால் ஊழியர்கள் கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து, பணி செய்யும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவ்வகையில், பொள்ளாச்சி கோட்டத்தில், தலைமை தபால் அலுவலகம் மற்றும் கிளை தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள், கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us