/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
/
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 29, 2025 09:07 PM
தொண்டாமுத்தூர்; பேரூரில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், பேரூரில், புதியதாக அரசு தொழில் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இங்கு, அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன், ஏரோநாட்டிக்கல் ஸ்ட்ரக்சர் அண்டு ஏக்யூப்மென்ட் பிட்டர், மல்டி மீடியா, அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், இன் பிளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டன்ட், சென்ட்ரல் ஏர் கண்டிஷன் பிளான்ட் மெக்கானிக் அண்டு ஒயர்மேன் போன்ற தொழில் பிரிவுகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை, கடந்த, 23ம் தேதி முதல் துவங்கியுள்ளது.
இந்த தொழில்பயிற்சி நிலையம் முற்றிலும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டையை கொண்டு வர வேண்டும்.
இதில்சேர விரும்புவோர், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், மற்றும் இதர ஆவணங்களுடன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, 95665 31310, 81220 47178 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.