ADDED : மார் 18, 2024 11:07 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை வலியுறுத்தி, ஊர்வலம் மேற்கொண்டனர். மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், அரசுப்பள்ளியில் சேர்ப்பதை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா பொருட்கள் குறித்து, துண்டு பிரசுரங்களை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை சத்தியா, தலைமையாசிரியர் தினகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் நகராட்சி நடுநிலைபப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சேர்ப்போம், பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
