/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவியை தாக்கிய மாணவன் கைது
/
கல்லுாரி மாணவியை தாக்கிய மாணவன் கைது
ADDED : செப் 16, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; போத்தனுாரை சேர்ந்த ஒருவரின் மகள், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். உடன் பயிலும் ஈச்சனாரி, அய்யப்பா நகரை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி, 20 என்பவருடன் பழகி வந்தார். இதையறிந்த தந்தை, மகளை கண்டித்தார். அப்பெண், ராகுல் சக்ரவர்த்தியின் நடவடிக்கை சரியில்லாததால், பழகுவதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
கடந்த, 13ல் கல்லுாரிக்குச் சென்ற அம்மாணவி, தாமதமாக வீடு திரும்பினார். இதுகுறித்து கேட்டபோது ராகுல் சக்ரவர்த்தி, தன்னை தாக்கியதாக கூறினார். சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்ததால், ராகுல் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.