ADDED : பிப் 13, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், மரக்கன்றுகள் நடவு செய்து வேளாண் மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர், ஆழியாறு பகுதியில் தங்கி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்து வருகின்றனர்.
அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டோரம் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வருவாய்துறை, வேளாண் பொறியியல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர். அத்திமரம், அரசமரம் உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்னை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மரக்கன்று நடுவதால் சுற்றுச்சூழலை பாதுகாத்து, சாலையோர பசுமையை அதிகரிக்க முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
