ADDED : மார் 16, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மொபைல் போன் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவர், மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செபாஸ்டின், 49. இவரது மகன் டேவிட் பிரிட்ஜ், 24, தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

