/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்
/
பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்
பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்
பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்
ADDED : மார் 09, 2024 09:41 AM
கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை, அதிகளவில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார்.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் ராஜாமணி, 35; டிரைவர். மனைவி புவனேஸ்வரி, 31. இவர்களது, 6 வயது மகள் தியாஸ்ரீ. சிங்காநல்லுார் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு சில நாட்களுக்கு முன், பள்ளியில் சத்து மாத்திரை கொடுத்துள்ளனர். இதனை அந்த குழந்தை, புத்தகப்பையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மிட்டாய் என நினைத்து, உட்கொண்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த, 5ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று போக்கில் வெளியேறிய மாத்திரைகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையின் புத்தகப்பையை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.