ADDED : பிப் 19, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கோவர்த்தன மணிபாரதி, 19. கோவை தனியார் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை 7:30 மணிக்கு பைக்கில் ஹோப் காலேஜில் இருந்து பீளமேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பின்னால் வந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. கீழே விழுந்த கோவர்த்தன மணிபாரதி மீது ஆம்னி பஸ் ஏறியது. இதில் அவர் பலியானார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
