/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு எதிரொலி; இரண்டாம் சுழற்சி நடைமுறைக்கு கோரிக்கை
/
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு எதிரொலி; இரண்டாம் சுழற்சி நடைமுறைக்கு கோரிக்கை
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு எதிரொலி; இரண்டாம் சுழற்சி நடைமுறைக்கு கோரிக்கை
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு எதிரொலி; இரண்டாம் சுழற்சி நடைமுறைக்கு கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 11:45 PM
கோவை; மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், எட்டு பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் சுழற்சி நடைமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 6,430 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லுாரியில், 23 இளங்கலை, 21 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 17 பாடங்களில் பி.எச்டி., கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.
கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.குறைந்த கட்டணம், நகரின் மையப்பகுதியில் உள்ளதால், ஆண்டுதோறும் கல்லுாரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கல்லுாரியில் இளநிலை, முதுகலையில் கூடுதல் பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லுாரியில் மாணவர்களின் நலனுக்காக காலை மற்றும் மாலை என, இரு சுழற்சி முறைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் அதிகம் சேரும் எட்டு பாடப்பிரிவுகளில் இரண்டாம் சுழற்சி நடைமுறையை செயல்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,'மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாகவே, பி.பி.ஏ., பி.காம்., (ஐ.பி.,), பி.காம்.,(சி.ஏ.,), பி.ஏ., (அரசியல்), பி.ஏ.,(பொது நிர்வாகம்), பி.எஸ்சி.,(ஜியாலஜி), பி.எஸ்சி.,(ஐ.டி.,), பி.எஸ்சி.,(புள்ளியியல்) ஆகிய எட்டு இளநிலை படிப்புகளுக்கு இரண்டாம் சுழற்சி நடைமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பாடப்பிரிவுகள் ஆங்கில வழிக்கல்வியில், பயிற்றுவிக்கப்படுகிறது. அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது,' என்றார்.

