/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஸ் போட்டியில் மாணவி அசத்தல்
/
செஸ் போட்டியில் மாணவி அசத்தல்
ADDED : டிச 13, 2025 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.
கோவை தனியார் பள்ளியில் சக்ரவியூகா செஸ் அகாடமி சார்பில் நடந்த, செஸ் போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வள்ளி பங்கேற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
மாணவிக்கு, சான்றிதழ் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவியை பாராட்டினர்.

