/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது! பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் பேச்சு
/
காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது! பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் பேச்சு
காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது! பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் பேச்சு
காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது! பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் பேச்சு
ADDED : டிச 13, 2025 07:50 AM

பொள்ளாச்சி: ''ஓட்டுக்கு காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் பேசினார்.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதி பா.ஜ. பூத் கமிட்டி மாநாடு, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ஜ. பொள்ளாச்சி சட்டசபை அமைப்பாளர் துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரசேகர்,நகர தலைவர் கோகுல்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோட்ட பொறுப்பாளர் பாலகுமார், ஈரோடு முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் பேசினர்.
மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி விட்டோம். அதற்கான பணிகளில் தீவிரம் செலுத்த வேண்டும். தி.மு.க. என்ற பல்பு, பீஸ் போகிற அளவுக்கு அதிக மின்சார திறன் கொண்டவர்களாக நாம் களத்தில் செயல்பட வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில், திருட்டு, கொலை, கொள்ளை, கஞ்சா என சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, பிரதமர் மோடியின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழ், தமிழ் இனம் என கூறி மக்களை ஏமாற்றும் தி.மு.க.வின் நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. இம்முறை ஓட்டுக்கு காசு கொடுத்தாலும் மக்கள் மனநிலை மாறாது.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக சொன்னார்கள்; ஆனால், தற்போது, 90 மில்லி மதுபானம் விற்கின்றனர். இது தான் படிப்படியாக குறைப்பதாக தெரிகிறது. டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடிய கனிமொழி எங்கே போனார்.
ஹிந்து கடவுளை அவமானப்படுத்தும் தி.மு.க. ஆட்சி மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. இது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

