/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா
/
மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா
ADDED : ஜூலை 16, 2025 10:38 PM

கோவை; எட்டிமடை அமிர்த வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில், மாணவத் தலைவர்கள் பொறுப்பேற்கும், 'ஸ்தான ஆரோகண' விழா நடந்தது.
கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்ற மாணவர் சந்தீவின் பெற்றோர்கள் பாலசுப்பிரமணியன், யசோதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பிளஸ் 1 மாணவன் விஷ்ணு கார்த்திக் தலைமை மாணவனாகவும், மாணவி மாளவிகா தலைமை மாணவியாகவும் பொறுப்பேற்றனர். பள்ளியின் நற்பெயர் காக்க உறுதியேற்றனர். கடந்த ஆண்டின் மாணவர் தலைவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பள்ளி முதல்வர் நெடுமாறன், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பதவி ஏற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

