ADDED : செப் 05, 2025 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு மாணவர் காங்., சார்பில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாணவர் காங்., மாநில துணைத்தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அகில இந்திய மாணவர் காங்., பொதுச் செயலாளர் முகமது பாகத், மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்., சார்பில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், தேர்தல் ஆணையத்தையும் முற்றுகையிட உள்ளோம்,'' என்றார்.
மாணவர் காங்., மாநில தலைவர் சின்னத்தம்பி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், தொழிற்சங்க தலைவர் ராஜா மணி, மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், நிர்வாகிகள் சவுந்தரராஜன், இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.