ADDED : ஜன 22, 2025 07:46 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர், மணல் சிற்பத்தில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தார்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 145 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், மாணவர்கள் திறமையை கண்டறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலைத் திருவிழா போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது.
இதில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கெவின்ராகவ், 2024 - 25ம் ஆண்டு கலைத் திருவிழாவில், கவிங்கலை நுண்கலை போட்டியில் பங்கேற்று மணல் சிற்பம் செய்தது, கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவனுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், கெவின்ராகவ்க்கு பள்ளி சார்பில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

