/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குத்துச்சண்டையில் மாணவர் முதலிடம்
/
குத்துச்சண்டையில் மாணவர் முதலிடம்
ADDED : டிச 11, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; குத்துச்சண்டைப் போட்டியில் காரமடை ஆர்.வி. கல்லூரி மாணவர் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான குத்துச்சண்டைப் போட்டியில், காரமடை டாக்டர். ஆர்.வி.கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறையில் பயிலும் மாணவர் கவின் பங்கேற்று முதலிடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், முதல்வர் ரூபா மற்றும் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.