தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவி பலாத்கார வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்

 மாணவி பலாத்கார வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்

 மாணவி பலாத்கார வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்


ADDED : டிச 13, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில், மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

கோவை, பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த மாதம் 2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவியை மூவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். இதுதொடர்பாக, சதீஷ், 30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது, கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில், பீளமேடுபோலீசார், இ-பைலிங் முறையில், முதல் கட்டமாக 50 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கூடுதல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம், நீதிமன்ற வழக்கு விசாரணை மாற்றப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றம் செய்து நீதிபதி சிந்து உத்தரவிட்டார்.

அடுத்த விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு எண் கொடுக்கப்பட்டு, விசாரணை நடத்த மகளிர் கோர்ட்டிற்கு பரிந்துரைக்கப்படும். மகளிர் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு முறைப்படி விரைவில் சாட்சி விசாரணை துவங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us