/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு
/
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு
ADDED : ஜன 08, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; தேசிய அளவில் 'கிராஸ் கன்ட்ரி' எனப்படும் நெடுதுார சாலை ஓட்டம், உத்திரபிரதேசம் மாநிலம், மீரட்டில் வரும், 12ம் தேதி நடக்கிறது. இதற்கான, தமிழக அணியின் போட்டித் தேர்வு விழுப்புரத்தில் நடந்தது.
அதில், பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர் கனிராஜா, சிறப்பாக செயல்பட்டு, நான்காமிடம் பிடித்தார். அவ்வகையில், 6 வீரர்களை உள்ளடக்கிய தமிழக அணியிலும் இடம்பெற்றார்.
இவரை, கல்லுாரித்தலைவர் சேதுபதி, துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, உடற்கல்வி இயக்குநர் பாரதி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

