/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
/
மாநில பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : நவ 27, 2024 09:19 PM

வால்பாறை; பேச்சுப்போட்டியில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை அமைச்சர் பாராட்டி பரிசு வழங்கினார்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சிவசக்தி. இவர் மண்டல அளவில், என் உயிரினும் மேலான பேச்சு போட்டியில் கலந்து கொண்டு, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டார்.
இவரை, துணை முதல்வர் உதயநிதி சென்னையில் நடந்த விழாவில் பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிலையில், வால்பாறையில் நேற்று முன் தினம் நடந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., நகரச்செயலாளர் சுதாகர், நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.