தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு

மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு

மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு


ADDED : அக் 29, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்தவர் தீபக், 25. யோகா பயிற்சியாளர். இவர் 9 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கி வருகிறார். இவரிடம் பயின்ற மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஹவிஷ்மதி, 10, நந்தித்தா, 10, ஆதிக்ஷா, 10, கெளதமன், 9, முகமது பயிஸ், 9, திலிப், 10, மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ரவிச்சந்திரன், 23, அக்ஷயா, 24, ரேவதி, 22 ஆகியோர் சேலத்தில் அண்மையில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் 10 வயதுக்குட்பட்ட உட்பிரிவு மற்றும் 21 வயதுக்கு மேல் உட்பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு, 6 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

இதுகுறித்து, பயிற்சியாளர் தீபக், யோகா செய்வதால் உடல் வலிமை பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வு வாழ அன்றாடம் யோகா செய்வது அவசியம். தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்'', என்றார்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us