/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேற்றிய மாணவ, மாணவியர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேற்றிய மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேற்றிய மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி அரையிறுதிக்கு முன்னேற்றிய மாணவ, மாணவியர்
ADDED : டிச 06, 2024 04:57 AM

கோவை : 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தல் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
இந்தாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி,'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. நேற்று குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 80 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'இ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி அனுகீர்த்தனா, மாணவர் யுவன் ஆண்ட்ரூப் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுவர்ணலதா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, ஆசிரியர்கள் கிருத்திகாதேவி, அரசகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
ஒத்தக்கால் மண்டபம், வி.கெங்குசாமி நாயுடு பள்ளியில் நடந்த போட்டியில், 400 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கேத்லின் லித்வினா, 9ம் வகுப்பு மாணவி மேனகா சுருதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் வெங்கடஸ்ரீ பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சரண்யா, கவிதா, ஆசிரியர் ராஜசபாபதி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், அத்வைத் தாட் அகாடமியில் நடந்த போட்டியில், 42 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'இ' அணியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹரி, மாணவர் நிமல்மித்ரன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் குமாரிபத்மினி, துணை முதல்வர் ஈஸ்வரிமகேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, சர்வராணி, ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, காளீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.