/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்டுபிடிப்புகளால் கலக்கிய மாணவர்கள்
/
கண்டுபிடிப்புகளால் கலக்கிய மாணவர்கள்
ADDED : ஏப் 28, 2025 04:11 AM

கோவை : மணியகாரம்பாளையம், கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, 'கேம்போரலிக்ஸ்' என்ற பெயரில் நடந்தது.
மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியை, பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை துவக்கி வைத்தனர்.
அறிவியல், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
செயற்கை வனம், மூலிகை தாவரங்கள், சோலார் ஓவன், ரோபோட்டிக் அறிவியல், இந்திய இயற்கை உணவுகள், ராக்கெட் ஏவுதல், சூரிய அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

