/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்
/
கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்
கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்
கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்
ADDED : ஜூன் 23, 2025 11:54 PM
கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பரீட்சார்த்த முறையில் சில பள்ளிகளில் மட்டும் கணித ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தாபுதுார், செல்வபுரம், ராமகிருஷ்ணாபுரம், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கணிதக் கற்றல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மென்பொருளில், மாணவர்கள் உள்ளீடு செய்து, கணிதப் பாடப்பகுதிகளை 'மாடியூல்' அடிப்படையில், கணினி வழியாக செயல்முறையாக கற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மற்றும் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் திறன் அளவிடப்படுகிறது.
கணித ஆசிரியர் கூறுகையில், 'பாடப்புத்தகத்தில் உள்ள பகுதிகளை மாணவர்கள் நேரடியாக கணித ஆய்வகத்தில் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காக, தனிப்பட்ட பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நடுநிலை மாணவர்களின் கணிதத் திறன் மேம்பட்டுள்ளது.
நன்கு படிக்கும் மாணவர்கள் கடினமான கணக்குகளை விரைவாக செய்து முடிக்கின்றனர். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள், கணிதப் பாடத்தின் மீது மாணவர்களிடையே ஆர்வத்தை உருவாக்குகின்றன' என்றார்.