/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப பள்ளிகளில் நுால்கள் படிக்க மாணவர்கள் ஆர்வம்
/
ஆரம்ப பள்ளிகளில் நுால்கள் படிக்க மாணவர்கள் ஆர்வம்
ADDED : மார் 20, 2025 11:26 PM

வால்பாறை,: வால்பாறையில், பள்ளிகளில் அமைந்துள்ள நுாலகங்களில், நுால்கள் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வால்பாறை திருஇருதய ஆரம்ப பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், நுாலகம் செயல்படுகிறது. நாள் தோறும் மாணவர்கள் நுாலகத்தில் உள்ள நுால்களை படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியை மேகலா பேசியதாவது:
மாணவர்களிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், பள்ளியில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொதுஅறிவை மேம்படுத்தும் வகையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தனித்தனியாக நுாலத்தில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளியில் செயல்படும் நுாலகத்தை பயன்படுத்த, மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தவிர, நுாலக ஆசிரியை வாயிலாக அன்றாட நாட்டு நடப்புக்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நாளிதழ்களையும் மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்களிடம் மொபைல்போன் வழங்குவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.