/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி கடன் முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
/
கல்வி கடன் முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
கல்வி கடன் முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
கல்வி கடன் முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 13, 2024 12:14 AM
கோவை;மாணவ, மாணவியர் உயர் கல்வி பயில்வதற்காக, கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு ஆக.,- அக்., மாதங்களில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்பட்டன. விண்ணப்பித்த மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல், வரும் 15ம் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கடன் கிடைப்பதற்காக, கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ.,வை உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட, முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, கல்வி கடன் வழங்குவதை கண்காணித்து, முறைப்படுத்தி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், இதற்கென தனிப்பிரிவு செயல்படுகிறது.
வரும், 15ம் தேதி நடைபெறும் சிறப்பு கல்வி கடன் முகாமில், தகுதியுள்ள மாணவ மாணவியர் பங்கேற்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.