ADDED : பிப் 16, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனூரில் உர மேலாண்மை குறித்து கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவர்கள், கிணத்துக்கடவு பகுதியில் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பகவுண்டனூரில் உள்ள விவசாயிகளுக்கு, பாஸ்போ பாக்டீரியா மற்று ம் பொட்டாஷ் பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்களின் உபயோகம் மற்றும் பயன்பாடுகள் குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், விதை நேர்த்தி குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
