/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது
/
மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது
மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது
மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது
ADDED : செப் 13, 2025 09:29 PM
பொள்ளாச்சி:மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த, 58 வயதான கூலி தொழிலாளி, பெண் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரை திருமணம் செய்து, குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். இவரது, 15 வயதான வளர்ப்பு மகள், அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
இவருக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடையில் வேலை பார்த்த தொழிலாளி கவியரசன், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை காட்டி, மாணவியை பல்வேறு இடங்களுக்கு, கவியரசன் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, வளர்ப்பு தந்தைக்கு தகவல் தெரிந்ததும், அவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். வயிற்று வலி ஏற்படவே, மாணவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை, டாக்டர்கள் உறுதி செய்தனர். மாணவியின் தாய் புகாரில், போக்சோவில் காதலன், வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.