/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்
/
பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்
ADDED : செப் 30, 2025 12:47 AM

கோவை; பீளமேடு, நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், 'நம்ம கிராமம்' எனும் பெயரில்,பாரம்பரிய நாள் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்டாக்டர் பாலாஜிபங்கேற்றார்.
கிராமங்களில் உள்ளது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சந்தைகள், கடைகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் கொலு வைத்தும் நவராத்திரி விழா கொண்டாடினர்.
இதிலிருந்து பெறப்படும்தொகை முழுவதும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், நேஷனல் மாடல் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகன் சந்தர், உமா, முதல்வர் கீதா, துணை முதல்வர் லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.