தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு விடுதியில் மாணவர்கள் மோதல்

 அரசு விடுதியில் மாணவர்கள் மோதல்

 அரசு விடுதியில் மாணவர்கள் மோதல்


ADDED : மார் 31, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் மாடியில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தனர்.

சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு சமூக நீதி விடுதியில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 18 மாணவர்கள் தங்கி அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் இரவு விடுதியில் தங்கியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ராஜா, 14. சாமளாபுரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், ஜெய் கணேஷ், 14. ஆகிய இருவருக்கும் இடையே மொபைல் பார்ப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு அதிகமாகி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

அப்போது மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் அடிபட்ட ராஜாவுக்கு அன்னுார் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெய்கணேசுக்கு அன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சமூக நீதி விடுதி வார்டன் அன்னுாரை சேர்ந்த ஜெகதீசன், 53. என்பவர் கொடுத்த புகாரின் பேரில், அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us