தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாணவர்களின் படைப்பு காட்சி

 ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாணவர்களின் படைப்பு காட்சி

 ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாணவர்களின் படைப்பு காட்சி


ADDED : ஜன 13, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான கண்காட்சி நடந்தது.

கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், தூய்மை பாரத இயக்கம் வாயிலாக கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான, 'பசுமை நிலம் வேண்டும், குப்பையில்லா களம் வேண்டும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில், தண்ணீரில் இருக்கும் குப்பையை அகற்றும் இயந்திரம், நகர்த்தும் வகையில் மொபைல் வீடு, இயற்கை பிரிட்ஜ், உபயோகம் இல்லாத பொருட்களை கொண்டு பொக்லைன் இயந்திரம், கழிவு நீர் வெளியேற்றுதல், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் கைவினை பொருட்கள் என, பல பொருகளை செய்து காட்சிப்படுத்தி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு மற்றும் ராஜேஷ்குமார், ஒன்றிய அலுவலர்கள் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us