தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்கள் கிரிக்கெட்; ராமகிருஷ்ணா அசத்தல் 

மாணவர்கள் கிரிக்கெட்; ராமகிருஷ்ணா அசத்தல் 

மாணவர்கள் கிரிக்கெட்; ராமகிருஷ்ணா அசத்தல் 


ADDED : ஜன 10, 2024 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் காலிறுதிப்போட்டியில் ஆர்.கே.எஸ்., பள்ளி அணியை, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராமகிருஷ்ணா பள்ளி அரையிறுதிக்கு முன்னேறியது.

ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பில், 27ம் ஆண்டு 'ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கோவையில் நடக்கிறது. இதில், 16 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் காலிறுதிப்போட்டியில் ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ்., பள்ளி அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது. அணியின் கேப்டன் முகமது அபசன் (31) பொறுப்பாக விளையாடினார். அடுத்து விளையாடிய ராமகிருஷ்ணா அணி பிரசன்னாவின் (65*) அதிரடி ஆட்டத்தால், 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us