ADDED : பிப் 24, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
கோவை: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், பாலத்துறை அரசு பள்ளி மாணவர்கள் பெங்களூருவுக்கு கல்வி, அனுபவச் சுற்றுலா செல்கின்றனர். வரும் 27 காலை ஆசிரியர்களுடன் கோவையிலிருந்து புறப்படுகின்றனர்.
பெங்களூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள அறிவியல் மற்றும் விலங்கியல் பூங்காக்கள், ஜவஹர்லால் நேரு கோளரங்கம், கப்பன் பூங்கா, பன்னர்கட்டா உயிரியல் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவற்றை தொடர்ந்து, விஸ்வேஸ்வரய்யா அறிவியல் பூங்காவை பார்வையிடுகின்றனர்.
இக்கல்விச்சுற்றுலா, மாணவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் எதிர்கால கனவுகளை விரிவுபடுத்தும் வகையில் அமையும் என, மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
