/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகிய வானியல் நிகழ்வு மாணவர்கள் கண்டு ரசிப்பு
/
அழகிய வானியல் நிகழ்வு மாணவர்கள் கண்டு ரசிப்பு
ADDED : ஜன 30, 2025 11:09 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், கோள்களின் அணிவகுப்பை தொலைநோக்கி வழியே மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஜனவரி கடைசி வாரம் முதல், பிப்ரவரியில் முதல் இரு வாரங்கள், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் என, அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வானியல் அதிசயம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். இந்த நிகழ்வை உலகெங்கும் இருக்கும் வானவியல் செயல்பாட்டாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்தும் வருகின்றனர்.
பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், வானவியல் சங்கம் வாயிலாக தொலைநோக்கி வழியே கோள்களை காண ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி, திஷா பள்ளி, பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி மற்றும் விஸ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளி மாணவர்கள், 249 பேர், இந்த அரிய நிகழ்வை கண்டு ஆச்சர்யபட்டனர்.
மாணவர்கள் கூறுகையில், 'கோள்கள் அவற்றின் பாதையில்தான் பயணிக்கின்றன. அவைகளில் நிலைபாட்டை ஒவ்வொன்றாக கண்டறிய முடிகிறது,' என்றனர்.

