/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ட்ரீம்' ஆப் ட்ரீ' திரைப்படம் பார்த்து ரசித்த மாணவர்கள்
/
'ட்ரீம்' ஆப் ட்ரீ' திரைப்படம் பார்த்து ரசித்த மாணவர்கள்
'ட்ரீம்' ஆப் ட்ரீ' திரைப்படம் பார்த்து ரசித்த மாணவர்கள்
'ட்ரீம்' ஆப் ட்ரீ' திரைப்படம் பார்த்து ரசித்த மாணவர்கள்
ADDED : ஜன 22, 2025 07:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், 33 நிமிடம் ஓடக்கூடிய 'ட்ரீம் ஆப் ட்ரீ' எனும் திரைப்படத்தை மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாதம்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்களை பார்ப்பதன் வாயிலாக, மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உரமிட, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து, ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.
அவ்வகையில், இம்மாதம், 'ட்ரீம் ஆப் ட்ரீ' எனும், 33 நிமிடம் ஓடக்கூடிய சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது. அதன்படி, தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் திரையிடப்பட்ட இந்த சினிமாவை, மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின், ஆனைமலை பகுதியில் உள்ள வெப்ப மண்டல காடுகளில் குறைந்த மழை வளத்தை மறுசீரமைப்பு செய்யும் சூழலியல் குறித்து, இந்தத் திரைப்படம் நகர்கிறது.
குறிப்பாக, அசாதாரணமான மலைக்காடுகளில் மழை வளத்தை பெருக்கவும், அவற்றை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது. இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திவ்யா முடப்பா மற்றும் சங்கர் ராமன் ஆகியோரின் ஆய்வு குறித்தும் பேசுகிறது. மேலும், வனப்பகுதியில் உள்ள கார்பன்களை வெளியேற்றி, காலநிலை மாற்றத்தால் நெருக்கடிகளையும் விளக்குகிறது.

