/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரிகளில் கவுன்சிலிங் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
/
அரசு கல்லுாரிகளில் கவுன்சிலிங் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
அரசு கல்லுாரிகளில் கவுன்சிலிங் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
அரசு கல்லுாரிகளில் கவுன்சிலிங் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஜூன் 02, 2025 11:37 PM

கோவை : அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை அரசு கலை கல்லுாரியில் சேர மொத்தம், 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கோவை புலியகுளம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில் உள்ள, 410 இடங்களில் சேர, 10 ஆயிரத்து, 723 பேர் விண்ணப்பித்திருந்தனர். தரவரிசை வெளியிடப்பட்ட நிலையில், நேற்று சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் சிறப்பு பிரிவில், மொத்தம், 150 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, 2,553 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று நடந்த கவுன்சிலிங்கில், மாற்றுத்திறன் மாணவர்கள் பிரிவில், 86 இடங்களுக்கு, 35, விளையாட்டு பிரிவுக்கான, 52 இடங்களில், 45, முன்னாள் ராணுவத்தினர் பிரிவில், 6 இடங்களில், இருவர், என்.சி.சி., பிரிவுக்கான ஒரு இடத்துக்கு ஒருவர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மனைவியர் பிரிவில், மூன்று இடங்களுக்கு, ஒருவர் என, மொத்தம், 84 பேர் தங்களுக்கான விருப்பப்பாடத்தில் சேர்ந்தனர்.
புலியகுளம் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் சிறப்பு பிரிவில், 41 இடங்கள் உள்ளன. இவற்றில், விளையாட்டு பிரிவில் உள்ள, 12 இடங்களுக்கு மொத்தம், 187 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று நடந்த கவுன்சிலிங்கில், ஒன்பது பேர் பங்கேற்றனர். அதில் 4 பேர் இடங்களை தேர்வு செய்தனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான 21 இடங்கள் உள்ளன.
விண்ணப்பித்த, 27 பேரில் நேற்று கவுன்சிலிங்கில் பங்கேற்ற இருவரும், தங்களது இடங்களை தேர்வு செய்தனர். என்.சி.சி., பிரிவுக்கான ஒரு இடம் நேற்று நிரம்பியது.