/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஹேக்கத்தானில் அசத்திய மாணவர்கள்
/
தேசிய ஹேக்கத்தானில் அசத்திய மாணவர்கள்
ADDED : பிப் 10, 2026 05:22 AM

கோவை: எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஓ.டி.ஓ.ஓ., இணைந்து, தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கோடிங் திறன்களை மையமாகக் கொண்டு போட்டிகள் நடந்தன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்ற மாணவர்களில், 300 பேர் இறுதிப்போட்டிக்கு பங்கேற்றனர்.
இறுதி போட்டியில், விஜயவாடா, கே.எல். பல்கலையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசையும், பெங்களூரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இரண்டாம் பரிசையும் வென்றது. எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக்கல்லுாரி மூன்றாம் பரிசை பெற்றது.
ஹோக்கத்தான் மாணவர்களின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன், புதுமையான சிந்தனை மற்றும் சிறந்த குழுப்பணித் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த உதவியதோடு, தொழில்துறை-கல்வி இணைப்பிற்கு பெரும் உதவியாய் இருந்தது.

