ADDED : பிப் 04, 2026 05:09 AM

கோவை: எஸ்.என்.எஸ். கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியை நடத்தின. இதில், வெவ்வேறு கல்லுாரிகளில் இருந்து 144 அணிகள் பங்கேற்றன.
கோ - கோ, கபடி, வாலிபால, த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. கோ- கோ, பேஸ்கட்பால், கபடி ஆகிய போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கொங்குநாடு பொறியியல் கல்லுாரி முதல் இடத்தை பிடித்தது.
த்ரோபால் பெண்கள் பிரிவில் ஜி.வி.ஜி., பெண்கள் கல்லுாரியும், ஆண்கள் பிரிவில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியும், வாலிபால் ஆண்கள் பிரிவில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியும் முதல் இடங்களை பிடித்தன.
பூப்பந்து பெண்கள் பிரிவில் கே.பி.ஆர்., கல்லுாரியும், ஆண்கள் பிரிவில் கொங்கு பொறியியல் கல்லுாரியும், கலப்பு பிரிவில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியும் முதல் இடத்தை பிடித்தன.
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் சார்லஸ், துணை முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
