/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
/
விளையாட்டு விழாவில் அசத்திய மாணவர்கள்
ADDED : ஆக 08, 2025 09:16 PM

கோவை; மாதம்பட்டி, விஷ்வன்கர் பப்ளிக் பள்ளியின் 11வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தாளாளர் சங்கீதா, பள்ளியின் இயக்குனர் கதிர்வேல் விழாவிற்கு தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு சிறப்பு காவல் நான்காவது பட்டாலியன் துணை கமாண்டன்ட் பூபதி மற்றும் பாரதியார் பல்கலை உடற்கல்வியியல் பேராசிரியர் குமரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சமாதானப் புறாவைப் பறக்கவிட்டு விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
விருந்தினர்கள் பேசுகையில், '' நம் வாழ்க்கையை யாரோ எழுதுவதில்லை. நாம் தான் எழுதுகிறோம். வாழ்வை அற்புதமாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது.மொபைல் போனில் மூழ்காமல், உடல்சார்ந்த விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும், '' என்றார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.