/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிளஸ்டர் கால்பந்தில் அசத்திய மாணவர்கள்
/
கிளஸ்டர் கால்பந்தில் அசத்திய மாணவர்கள்
ADDED : ஜூலை 30, 2025 09:17 PM

கோவை; ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பில், மாநில அளவிலான ஐந்து நாள் கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி துவங்கியது.
துவக்க விழாவிற்கு, ரத்தினம் கல்விக்குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், இயக்குனர் ஷிமா ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் போட்டிகளை, துவக்கி வைத்தார். கோவையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி, ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பில் நடந்தது.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 400 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில், ஒன்பதாயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.