ADDED : மார் 09, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் நகர் மன்ற உறுப்பினர் சத்தியவாணிமுத்து, தமிழக ஆசிரியர் கூட்டணி சங்க தலைவர் கென்னடி ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
