/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சாலையில் மாணவர்கள் கள ஆய்வு
/
தொழிற்சாலையில் மாணவர்கள் கள ஆய்வு
ADDED : டிச 13, 2024 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள், திருப்பூர், பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட்ஸ் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் துறையின் முன்னணி தொழில்நுட்பம், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.
அதேபோல, தொழிற்சாலை நிர்வாகிகள் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் அதன் இயக்கம் குறித்து, செயல்முறையுடன் விளக்கினர். கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா தலைமையில், பேராசிரியர்கள் பாலாஜிவிக்னேஷ், கவிதா ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

